குளித்தலை அருகே இருதரப்பினரிடையே மோதல்; 11 பேர் கைது


குளித்தலை அருகே இருதரப்பினரிடையே மோதல்; 11 பேர் கைது
x
தினத்தந்தி 6 March 2022 12:10 AM IST (Updated: 6 March 2022 12:10 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

குளித்தலை, 
தாக்குதல்
குளித்தலை அருகே உள்ள கோட்டைமேடு அரிசன தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மகன் அசோக் (வயது 22). இவர் ஒரு பெண்ணிடம் நட்புடன் பழகி வந்துள்ளார். இதனை தவறாக நினைத்த அந்த பெண்ணின் குடும்பத்தார் மற்றும் அவரது உறவினர்களான ராசு (26), ராஜலிங்கம் (24), ரமேஷ், சசிகுமார் (24), சரத் (24), குமரவேல், சக்திவேல் (23), சந்திரசேகரன் (34), வைரமூர்த்தி (65), பரமேஸ்வரி, மாலதி, அமுதவள்ளி உள்ளிட்டோர் அசோக் வீட்டிற்கு சென்றுள்ளனர். 
பின்னர் அங்கு இருந்த அவரது தாய் ரேவதியை (40) தகாத வார்த்தைகளால் திட்டி ரேவதியின் தம்பியான பிரகாஷ் (32), அவரது மனைவி வனிதா ஆகியோரை தாக்கியுள்ளனர். 
கொலை மிரட்டல்
மேலும் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி வீட்டின் ஓட்டின் மீது ஏறி மேற்கூரையும் சேதப்படுத்தியதோடு அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ரேவதி அளித்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் குடும்பத்தார் மற்றும் அவரது உறவினர்கள் 13 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதுபோல் கனகராஜ், அவரின் மகன்களான அசோக், ஆனந்த் (23), அரவிந்த் (24) மற்றும் உறவினர்களான மணிராஜன், கலைமணி, கலைச்செல்வன், பிரகாஷ் ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் கனகராஜ் உள்பட 8 பேர் மீது குளித்தலை போலீசார் மற்றொரு வழக்குப்பதிவு செய்தனர். 
11 பேர் கைது
இதையடுத்து, மோதலில் ஈடுபட்ட இருதரப்பைச் சேர்ந்த ராசு, ராஜலிங்கம், சசிகுமார், சரத், சக்திவேல், சந்திரசேகரன், வைரமூர்த்தி, அசோக், ஆனந்த், அரவிந்த், பிரகாஷ் ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story