வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணராயபுரம்,
கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் புது தெருவை சேர்ந்தவர் பூமாரிசாமி (வயது 55). இவர் கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பூமாரிசாமி தனது குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்றார். அப்போது வீட்டில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. மேலும், பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பூமாரிசாமி கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story