மது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை


மது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை
x
தினத்தந்தி 6 March 2022 12:21 AM IST (Updated: 6 March 2022 12:21 AM IST)
t-max-icont-min-icon

மது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள இனுங்கூர் காகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திர்ராஜ் (வயது 32). இவருடைய மனைவி மோகனப்பிரியா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதியினர் குடும்பத்துடன் திருச்சி மாவட்டம் ெபட்டவாய்த்தலை கரும்பாயி அம்மன் கோவில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
தேவேந்திர்ராஜிக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் குடிபோதையில் வந்த கணவரை மோகனப்பிரியா திட்டினாராம். இதனால் மனம் உடைந்த தேவேந்திர்ராஜ்  மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story