போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
நெல்லையில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை தாமிரபரணி பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கத்தின் மாநிலம் தழுவிய 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நேற்று முன்தினம் காலையில் தொடங்கி, நேற்று காலையில் நிறைவடைந்தது. சங்க மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார்.
14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்த வேண்டும். வரவுக்கும், செலவுக்கும் உள்ள வித்தியாச தொகையை பட்ஜெட்டில் வழங்க வேண்டும். 2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப அலுவலகத்தில் புதிய பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நிறைவுரையாற்றி உண்ணாவிர போராட்டத்தை முடித்து வைத்தார்.
Related Tags :
Next Story