சிவகாசி அருகே கேட்பாரற்று கிடந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி


சிவகாசி அருகே கேட்பாரற்று கிடந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி
x
தினத்தந்தி 6 March 2022 12:29 AM IST (Updated: 6 March 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே கேட்பாரற்று கிடந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகாசி, 
சிவகாசி அருகே கேட்பாரற்று கிடந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 
ரோட்டில் கிடந்த அரிசி மூடை
சிவகாசி தாலுகா பகுதியில் இருந்து அதிக அளவில் ரேஷன் அரிசிகள் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து தாசில்தார் ராஜ்குமாரின் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் அடிக்கடி திடீர் சோதனை செய்து ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்வது வழக்கம். 
இந்தநிலையில் சிவகாசி வட்டவழங்கல் அதிகாரி ஜெய பாண்டியன் தலைமையிலான வருவாய்த்துறையினர் திருத்தங்கல்-பள்ளப்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கேட்பாரற்று 1,500 கிலோ ரேஷன் அரிசி ரோட்டில் மூடைகளாக கட்டப்பட்டு கிடந்தது. இதை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 
நடவடிக்கை 
பின்னர் அந்த ரேஷன் அரிசி மூடைகளை மீட்டு சிவகாசியில் உள்ள கிட்டங்கியில் ஒப்படைத்தனர். சிவகாசி பகுதியில் பல இடங்களில் ரேஷன் அரிசி மூடைகளை பதுக்கி வைக்கும் ரகசிய குடோன்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது. 
1 கிலோ ரேஷன் அரிசியை வெளி மாநில தரகர்கள் ரூ.5 முதல் ரூ.7 வரை கொடுத்து வாங்கி அனுப்புவதாக கூறப்படுகிறது. ரேஷன் அரிசிகளை வீடுகளுக்கு சென்று சேகரிப்பவர்களுக்கு தினமும் ரூ.500 சம்பளம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story