பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
பரமக்குடி அங்காளபரமேஸ்வரி கோவிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
பரமக்குடி,
பரமக்குடியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் வாணிக் கருப்பண சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி தினமும் சுவாமி வீதி உலா வந்தது. நேற்று பாரிவேட்டை மற்றும் பால்குட திருவிழா நடைபெற்றது. இதற்கு கோவிலின் பரம்பரை அறங்காவலர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் பிருந்தாஜோதிகுமார், மணலூர் கலாவதி முத்து ராமன், ஆயிரவைசிய சபை தலைவர் ராசி போஸ், சமூக நலச்சங்க தலைவர் பாலுச்சாமி, ஆடிட்டர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோனியா ராஜ் திலக் அனைவரையும் வரவேற்றார்.தொழிலதிபர் சத்துருகண்டன் பால்குட ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர். பின்பு அந்த பாலால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு விசேஷ தீபாராதனைகள் நடந்தது. முடிவில் பா.ஜ.க. மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் வைரம் ஜீவானந்தம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story