விபசார வழக்கில் 6 பேர் கைது
விபசார வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் சந்தைதோப்பு கீழ தெருவில் உள்ள வீட்டில் விபசாரம் நடப்பதாக, பாவூர்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று, அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் விபசாரம் நடந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அந்த வீட்டில் இருந்த 2 பெண்கள், புரோக்கர் மற்றும் வீட்டு உரிமையாளர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று பாவூர்சத்திரம் கே.டி.சி. நகரில் வாடகை வீடு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்டதாக, செங்கோட்டையை சேர்ந்த வாலிபரையும், பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story