சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும்


சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும்
x
தினத்தந்தி 6 March 2022 12:40 AM IST (Updated: 6 March 2022 12:40 AM IST)
t-max-icont-min-icon

சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வத்திராயிருப்பு, 
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டியில் வத்திராயிருப்பு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கண்ணன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் அ.தி.மு.க.வில் சசிகலா மற்றும் தினகரனை இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் இதுகுறித்த தீர்மானம் தேனிக்கு அடுத்தபடியாக வத்திராயிருப்பில் நிறைவேற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story