சிவகிரி எல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா- திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
சிவகிரி எல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
சிவகிரி
சிவகிரி எல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
எல்லை மாகாளியம்மன்
சிவகிரியில் பிரசித்திபெற்ற எல்லை மாகாளியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் இந்த கோவிலில் குண்டம் மற்றும் பொங்கல் விழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான விழா கடந்த 1-ந் தேதி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. அன்று குண்டம் இறங்கும் பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டார்கள்.
ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு கோவிலில் பூச்சாட்டப்பட்டது.
குண்டம் விழா
இதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணியளவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீர் கொண்டுவந்தார்கள்.
அதன்பின்னர் மாலை 6 மணி அளவில் குண்டம் விழா தொடங்கியது. முன்னதாக கோவில்முன்பு குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஆண்கள், பெண்கள் என 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
பொங்கல்-மாவிளக்கு
பக்தர்கள் சிலர் கைகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டும், அலகு குத்திக்கொண்டும் குண்டம் இறங்கியதை காணமுடிந்தது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவிலில் பொங்கல் விழா நடக்கிறது. காலை முதலே கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு படைத்து அம்மனை வழிபடுவார்கள்.
நாளை (திங்கட்கிழமை) மாலை மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
Related Tags :
Next Story