புகார் பெட்டி
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ் வசதி
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து பேரையூருக்கு குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், மதுரைக்கு சிகிச்சைக்காக வரும் பெண்கள், நோயாளிகள் ஆகியோர் சரியான நேரத்திற்கு வர முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
சிவா, பேரையூர்.
குப்பை தொட்டி தேவை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா தம்பிபட்டி மெயின் ரோட்டில் குப்பை தொட்டி இல்லை. இதனால் சாலையில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இப்பகுதியில் தேங்கிய குப்பையால் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. தேங்கிய குப்பையில் பாம்புகள் போன்ற விஷப்பூச்சிகள் நடமாடுகின்றன. அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
மாரிமுத்து, தம்பிபட்டி.
பாலம் வேண்டும்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மில் கிருஷ்ணாபுரத்தில் பொதுமக்கள், விவசாயிகள் பலர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப்பகுதியில் உள்ள கண்மாய் நிரம்பி உள்ளது. இதனால் இந்த கண்மாயை கடக்க பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே கண்மாயை கடக்க பாலம் ஒன்றை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மில் கிருஷ்ணாபுரம்.
குடிநீர் தட்டுப்பாடு
சிவகங்கை மாவட்டம் கல்லல் யூனியனுக்குட்பட்ட புரண்டி, புதுக்குடி, கள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். தண்ணீருக்காக பல கிலோமீட்டர் சென்று குடிநீர் எடுத்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்கள், கல்லல்.
எரியாத தெருவிளக்கு
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் கிராமத்தில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவுநேரத்தில் தினமும் சிறு, சிறு விபத்துகளில் வாகனங்கள் சிக்குகின்றன. பெண்கள், குழந்தைகள் இரவு நேரங்களில் வெளியே வர பயப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எரியாத தெருவிளக்குகளை அப்புறப்படுத்தி விட்டு புது விளக்குகள் அமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும். பொதுமக்கள், பனைக்குளம்.
வாரச்சந்தை தேவை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவில் ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப்பகுதியில் வாரச்சந்தை நடைபெறுவது இல்லை. இதனால் விவசாயிகள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் மக்கள் காய்கறிகள், பழங்கள் வாங்க பல கிலோமீட்டர் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்தப்பகுதியில் வாரச்சந்தை நடைபெற ஆவணச்செய்ய வேண்டும்.
பொதுமக்கள், கீழக்கரை.
Related Tags :
Next Story