புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 6 March 2022 2:53 AM IST (Updated: 6 March 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் அளித்த கோரிக்கை விவரம் வருமாறு

சாலை வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா 28 அள்ளூர் கிராமத்தில் விவசாயிகள் வயல்களில் இருந்துநெல் கொள்முதல் நிலையத்துக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மண்பாதை மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் வயல்களுக்கு அறுவடைக்கு கொண்டுவரப்படும் எந்திரங்கள், டிராக்டர்கள் மற்றும் கனரக வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. அதுமட்டுமின்றி சேறும், சகதியுமான சாலையினால் வயல்களுக்கு வரும் விவசாயிகள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-விவசாயிகள், திருவையாறு.

Next Story