விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடுபாதையில் நின்றது-3 அமைச்சர்கள் பயணத்தை ரத்து செய்தனர்

விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடுபாதையில் நின்றது-3 அமைச்சர்கள் பயணத்தை ரத்து செய்தனர்
x

மதுரையில் இருந்து சென்னை புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப காரணமாக ஓடுபாதையில் நின்றது. கோளாறை சரிசெய்ய முடியாததால் 3 அமைச்சர்கள் பயணத்தை ரத்து செய்தனர்.

மதுரை
மதுரையில் இருந்து சென்னை புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப காரணமாக ஓடுபாதையில் நின்றது. கோளாறை சரிசெய்ய முடியாததால் 3 அமைச்சர்கள் பயணத்தை ரத்து செய்தனர்.
ஓடுபாதையில் நின்றது
மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு நேற்று மதியம் 2 மணிக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்ட 162 பயணிகள் சென்னை மற்றும் மும்பை செல்ல இருந்தனர்.
விமானம் ஓடு பாதையில் புறப்பட்டு நகர்ந்த, சில வினாடிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்றுவிட்டது. அதை தொடர்ந்து பயணிகள் விமானத்திலேயே இருக்க வைக்கப்பட்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் கொண்டு சரிசெய்யும் பணி நடந்தது.
பயணத்தை ரத்து செய்த அமைச்சர்கள்
மாலை 4 மணி வரை கோளாறு சரிசெய்யப்படாததால் அதில் செல்ல இருந்த அமைச்சர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்து திரும்பினர்.
மாலை 6 மணிவரை காத்திருந்த பயணிகள் சிலர் தங்களது பயணத்தை ரத்து செய்தும், சிலர் கார் மற்றும் பஸ்கள் மூலமாகவும் புறப்பட்டுச் சென்றனர். இதனால் அனைத்து பயணிகளும் அவதி அடைந்தனர். 
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ஓடு பாதையிலேயே நின்றதால் விமான நிலையத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story