மகளுடன் பேச மனைவி அனுமதி மறுத்ததால் லாரி மெக்கானிக் தற்கொலை
மகளுடன் பேச மனைவி அனுமதி மறுத்ததால் லாரி மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.
சங்ககிரி:
சங்ககிரி அருகே உள்ள பச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 26). லாரி மெக்கானிக். இவருக்கு திருமணமாகி மனைவியும், 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் அவருடைய மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டதால், மகளை தன்னுடன் அழைத்துக்கொண்டு பெங்களூரு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மூர்த்தி தனது மகளுடன் பேச வேண்டி மனைவியின் செல்போனுக்கு அழைத்துள்ளார். ஆனால், மகளுடன் பேசுவதற்கு அவரது மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் ெவறுப்படைந்த மூர்த்தி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story