பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 9 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது; போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை
பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 9 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னையில் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் 4-ந் தேதி வரையில் கொலை, கொலை முயற்சி, நில அபகரிப்பு, வங்கி மோசடி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் சிக்கிய 9 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்தார். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானவர்கள் விவரம் வருமாறு:-
சைதாப்பேட்டையை சேர்ந்த குண்டு ராஜ்(வயது 23), தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு வசந்தகுமார்(22), எண்ணூர் சுனாமி குடியிருப்பு சினேக் சசி(28), தண்டையார்பேட்டை சென்னியம்மன் கோவில் நகரை சேர்ந்த சந்துரு(32), பெசன்ட் நகரை சேர்ந்த வசந்த் என்ற செல்வக்குமார்(23), வில்லிவாக்கத்தை சேர்ந்த அஷ்வின்(24), பாடியநல்லூர் செந்தில்குமார்(41), கமலக்கண்ணன்(42), மயிலாப்பூரை சேர்ந்த தமிழரசன்(23).
இந்த ஆண்டு இதுவரையில் சென்னையில் 32 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
Related Tags :
Next Story