சாைலயோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்


சாைலயோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 6 March 2022 5:02 PM IST (Updated: 6 March 2022 5:02 PM IST)
t-max-icont-min-icon

சாைலயோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

விபத்துகள் அதிகம் நடப்பதால் மடத்துக்குளத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மடத்துக்குளம் 
   கோவை  திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் மடத்துக்குளத்தில் ரோட்டின் இருபுறமும் கடைகள் வீடுகள் உள்ளன. நால்ரோடு தொடங்கி தாலுகா அலுவலகம் வரை ரோட்டின் இருபுறமும் கடைகள், வங்கிகள், மருத்துவமனைகள், பேக்கரிகள், திருமண ம ண்டபம் ஆகியவை உள்ளன
. இவற்றுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தேசிய நெடுஞ்சாலையி்ன் இருபுறத் தையும் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.
 இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது 
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் 
   தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து  கட்டிடங்களை கட்டியுள்ளனர். இதனால் மிகவும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. 
வாகனங்கள் விலகிசெல்லும் போது விபத்து ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக நால் ரோட்டில் இருந்து தாலுகா அலுவலகம் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story