திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சந்திரசேகரர் கேடக உற்சவம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சந்திரசேகரர் கேடக உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர்:-
திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சந்திரசேகரர் கேடக உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பூமிக்குரிய தலம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாக கருதப்படுகிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரிய தலமான திருவாரூரில் பிறந்தாலும், திருவாரூர் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கிற தலமாகும். இந்த சிறப்புமிக்க கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப்புகழ் பெற்றது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை கொண்ட ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் (பிப்ரவரி) 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கேடக உற்சவம்
விழாவில் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆழித்தேரோட்ட விழா நடக்கிறது. ஆழித்தேருடன், விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் அலங்கரிக்கப்பட்டு தேரோட்டத்துக்கு தயாராகி வருகின்றன. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று சந்திரசேகரர் கேடக உற்சவம் நடந்தது. இதில் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story