முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1,500 போலீசார்
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி 5 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 17 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 35 இன்ஸ்பெக்டர்கள், 105 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாலாஜி சரவணன் (தூத்துக்குடி), கிருஷ்ணராஜ் (தென்காசி), கார்த்திக் (ராமநாதபுரம்), நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, சைபர் குற்ற பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் உள்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story