திருத்தணியில் அரசுக்கு சொந்தமான 2.25 ஏக்கர் நிலம் மீட்பு


திருத்தணியில் அரசுக்கு சொந்தமான 2.25 ஏக்கர் நிலம் மீட்பு
x
தினத்தந்தி 6 March 2022 8:06 PM IST (Updated: 6 March 2022 8:06 PM IST)
t-max-icont-min-icon

திருத்தணியில் அரசுக்கு சொந்தமான பொக்லைன் எந்திரம் மூலம் அங்கு போடப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட குடிசைகளை அகற்றி அரசு இடத்தை மீட்டனர்.

திருத்தணி புதிய பை-பாஸ் சாலையையொட்டி வள்ளியம்மாபுரம் பகுதிக்கு அருகில் அரசுக்கு சொந்தமான 2.25 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குடிசை அமைத்து ஆக்கிரமித்து வந்தது தெரியவந்தது. இதையறிந்து நேற்று ஆர்.டி.ஒ. சத்யா உத்தரவின் பேரில், திருத்தணி தாசில்தார் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பாளர்களிடம் இது அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் குடிசையை அகற்றுமாறு தெரிவித்தனர்.

இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, பொக்லைன் எந்திரம் மூலம் அங்கு போடப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட குடிசைகளை அகற்றி அரசு இடத்தை மீட்டனர். இதையொட்டி, திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.


Next Story