தொழிலாளி விஷம் குடித்து சாவு


தொழிலாளி விஷம் குடித்து சாவு
x
தினத்தந்தி 6 March 2022 8:26 PM IST (Updated: 6 March 2022 8:26 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே தொழிலாளி விஷம் குடித்து இறந்துபோனார்.

வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள சிக்குபோலகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி துர்கா (25) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக வெங்கடேஷ் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் வயிற்று வலி சரியாகவில்லை.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட வெங்கடேஷ் கடந்த 4-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷத்தை குடித்தார். இதில் மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story