கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்- சுமைப்பணி தொழிலாளர்கள்
கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
திருவாரூர்:-
கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
ஆலோசனை கூட்டம்
திருவாரூரில் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்க கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சுமை பணி தொழிலாளர் சங்க செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், நிர்வாகிகள் துரைராஜ், வேல்முருகன், காளிதாஸ், நித்திரன், முருகபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மதுபான பெட்டிகளுக்கு ஏற்று கூலியை ரூ.2.50 காசுளாக உயர்த்தி வழங்க வேண்டும். தொடர்ந்து 20 ஆண்டுகள் சுமைப்பணி தொழிலாளர்களாக பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அடிப்படை வசதிகள்
குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story