காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து குடியரசு தலைவர் மாளிகை முற்றுகை போராட்டம் பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு
காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து குடியரசு தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.
திருவாரூர்:-
காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து குடியரசு தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக பி.ஆர்.பாண்டின் அறிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் திருவாரூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: -
கர்நாடக அரசு ரூ.1,000 கோடி ஒதுக்கி மேகதாது அணை கட்டுமான பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். மேலும் காவிரி மேலாண்மை ஆணையமே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து மேகதாது அணை கட்ட தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முற்றுகை போராட்டம்
மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கைகளை தடுக்க தவறும் காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்தும், அணை கட்டுவதை உடனடியாக தடுக்க வலியுறுத்தியும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். முதல்நாள் 6-ந் தேதி நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம் நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
கூட்டத்தில் மாநில தலைவர் பழனியப்பன், மாவட்ட நிர்வாகிகள் ராமதாஸ், பாலசுப்பிரமணியன், சரவணன், சுப்பையன், நடராஜன் கோவிந்தராஜ், திருப்பதி வாண்டையார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story