மன்னார்குடி பெரியார் சிலை அருகே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பள்ளம்
மன்னார்குடி பெரியார் சிலை அருகே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பள்ளம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மன்னார்குடி:-
மன்னார்குடி நகரின் மைய பகுதியாக பெரியார் சிலை சந்திப்பு பகுதி உள்ளது. பஸ் நிலைய சாலை, கடைத்தெரு, மேலராஜவீதி, தாலுகா அலுவலகம் செல்லும் வினோபாஜி தெரு ஆகிய சாலைகள் சந்திக்கும் இடமாக பெரியார் சிலை சந்திப்பு உள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பஸ்கள் இந்த பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும். பஸ் நிலையத்தில் இருந்து நடேசன் தெரு வழியாக மேல ராஜவீதிக்கு திரும்பும் இடத்தில் பெரியார் சிலை அருகில் பெரிய அளவிலான பள்ளம் காணப்படுகிறது. நீண்ட நாட்களாக இந்த பள்ளம் சீர் செய்யப்படாமல் உள்ளதால் இந்த பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. பள்ளத்தில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Related Tags :
Next Story