‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 7 March 2022 12:30 AM IST (Updated: 6 March 2022 10:08 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை

திருவாரூர் மாவட்டம் தண்டலை ஊராட்சியில் உள்ள தியானபுரம் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே தியானபுரம் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தெட்சிணாமூர்த்தி, திருவாரூர்.

சுகாதார சீர்கேடு

திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஸ்ரீகோகணேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோவிலின் முன் பகுதியில் உள்ள சாலையோரத்தில் மழைநீருடன், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக பக்தர்கள் நடந்து செல்ல முடியாத சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், திருவாரூர்.


ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் 13.கர்ணாவூர் மெயின்ரோட்டில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் இருக்கிறது. குறிப்பாக மின்கம்பங்களின் அடிப்பகுதி சேதம் அடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து கீழே விழும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், திருவாரூர்.

Next Story