‘பிரதமரின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன்’; திண்டுக்கல்லில் சைதை துரைசாமி பேச்சு
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயரை வைத்த பிரதமரின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன் என்று திண்டுக்கல்லில் சைதை துரைசாமி பேசினார்.
திண்டுக்கல்:
‘சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயரை வைத்த பிரதமரின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன்.’ என்று திண்டுக்கல்லில் சைதை துரைசாமி பேசினார்.
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
அனைத்துலக மனிதநேய மாணிக்கம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு அறக்கட்டளை சார்பில் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா திண்டுக்கல்லில் நடந்தது. இதில் பெருநகர சென்னை முன்னாள் மேயரும், உலக எம்.ஜி.ஆர். பேரவை தலைவருமான சைதை துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நொடிப்பொழுதும் மறவாமல், மக்கள் மனதில் நீங்காமல் இருப்பவரே நமது எம்.ஜி.ஆர்.
தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆரை நீக்கும் போது, இதோடு அவர் முடிந்தார் என்று நினைத்தனர். ஆனால் முடிந்தது அவர்கள் தான். புதிய பரிணாமத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர்., தொடர்ந்து 3 முறை முதல்-அமைச்சர் என்ற புதிய சரித்திரத்தை உருவாக்கினார்.
முதல்-அமைச்சராக பதவியேற்று, முதல்-அமைச்சராகவே தனது வாழ்வை நிறைவு செய்தார். மருத்துவமனையில் படுத்துக்கொண்டே சட்டமன்ற தேர்தலில் தான் மட்டுமின்றி, தனது தம்பிகளையும் மாபெரும் வெற்றி பெற செய்தவர் எம்.ஜி.ஆர்.
183 இடங்களில் வெற்றி
அண்ணா மறைவுக்கு பிறகு, கருணாநிதியை முதல்-அமைச்சர் ஆக்கியது எம்.ஜி.ஆர் தான். 1971-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 183 இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற வரலாற்றை தி.மு.க.வுக்கு எம்.ஜி.ஆர். உருவாக்கி கொடுத்தார்.
ஆனால் அதன் பிறகு எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு நீக்கப்பட்டார். அதன்பிறகே தனி கட்சி தொடங்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். அதற்கான விதை நாளாக 1972-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி அமைந்தது. ‘அ.தி.மு.க.வின் முதல் தியாகி, அ.தி.மு.க.வின் பகத்சிங்’ என்று எம்.ஜி.ஆர் என்னை பாராட்டியதை மறக்க முடியாது.
எலுமிச்சை மாலை
எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், தி.மு.க. சார்பில் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு 26 எலுமிச்சை பழங்களை மாலையாக கோர்த்து எடுத்துச்சென்றேன்.
திருவாரூர் எம்.எல்.ஏ. பதவியை கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களை தயார் செய்திருந்தேன். கூட்டத்தில் அமைக்கப்பட்ட மேடையில் ஏறிய நான், அங்கிருந்த ஒலிப்பெருக்கியை பிடித்து பேசினேன்.
அப்போது, கலைஞரே....!வாக்காளர் பேரவை குறித்து மனு கொடுக்க வந்த எங்களை தெளிவில்லாதவர்கள் என்று கூறினீர்களே, தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆரை நீக்கிய தாங்களும், அதற்காக கையெழுத்திட்ட 26 செயற்குழு உறுப்பினர்களும் தான் தெளிவில்லாதவர்கள். நீங்கள் தேய்த்து குளியுங்கள் என்று கூறி அவரிடம் ஒரு துண்டு பிரசுரத்தையும், ஒரு எலுமிச்சை பழத்தையும் கொடுத்தேன்.
அவ்வளவுதான்....பிடியுங்கள் அவனை என்றார் கருணாநிதி. மேடையிலேயே என் மீது கடுமையான தாக்குதல் நடந்தது. மயக்கமுற்றேன். பிணத்தை தூக்குவது போல் எனது கையையும், காலையும் பிடித்து தூக்கிச்சென்று ஜீப்பில் போட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
எம்.ஜி.ஆர்.கொடுத்த பரிசு
என்னுடைய இந்த தியாகத்துக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசு சைதாப்பேட்டை தொகுதி அமைப்பாளர் பதவி. அன்று எனக்கு கிடைத்த பரவசம் இன்று வரை வேறு எங்கும் கிடைக்கவில்லை.
அதன் பின்னர் 1980-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன். அப்போது எம்.ஜி.ஆர். என்னை அழைத்து, கவலைப்படாதே. நீதான் அ.தி.மு.க.வின் முதல் மேயர் என்றார். அது 31 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. 5¼ லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே மேயர் நான் தான். இந்த வரலாற்றை எம்.ஜி.ஆர். இறைவனாக இருந்து உருவாக்கினார்.
சென்னை சென்டிரல் ரெயில்நிலையம்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு, எம்.ஜி.ஆர். பெயர் வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை மோடி நிறைவேற்றினார்.
அதன் பின்னர் பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ புத்தக வெளியீட்டு விழாவில் கல்வியாளராக என்னை கலந்துகொள்ள அழைத்தார்கள். அதில் கலந்துகொண்டதற்கு விமர்சனங்கள் எழுந்தன. அப்போது நான் கூறினேன், எம்.ஜி.ஆரின் பெயரை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வைத்த பிரதமர் மோடியின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதை பெருமையாக கருதுகிறேன்.
அன்றும், இன்றும், என்றும் எம்.ஜி.ஆரின் தொண்டனாக இருக்கவே விரும்புகிறேன். நான் சென்னையின் மேயராக 5 ஆண்டுகள் பதவியில் இருந்தேன். ஊழலற்ற, நேர்மையான மேயராக வாழ்ந்து வெளியே வந்திருக்கிறேன். நான் அரசியல்வாதி அல்ல. மற்றவர்களுக்காக வாழும் ஒரு சேவையாளன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கரநாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை சைதை துரைசாமி வழங்கினார். எம்.ஜி.ஆர் வேடமிட்டு சிலர் விழாவில் பங்கேற்றனர். அவர்களுடன் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Related Tags :
Next Story