மின்சாரம் நிறுத்தம்
மின்சாரம் நிறுத்தம்
சிவகங்கை,
மதகுபட்டி துணை மின் நிலையத்தில் திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மதகுபட்டி ஐ.டி.ஐ., அலவாக்கோட்டை, சிங்கினிபட்டி, அம்மச்சிபட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமாநகரி, திருமலை, கள்ளராதினிபட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலூர், பேரணிபட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம் பட்டி, காளையார்மங்கலம், கருங்காலபட்டி, கருங்காலக்குடி, அண்ணா நகர், பர்மா காலனி, நாலுகோட்டை, அரளிக்கோட்டை, ஜமீன்தார் பட்டி, ஆவத்தாரன்பட்டி, கணேசபுரம், ஏரியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் திருப்புவனம் நகர் மின் பாதையில் மின் கம்பியின் தரம் உயர்த்தும் பணி நடைபெற இருப்பதால் திங்கட்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பாக்கியா நகர், எஸ்.எம்.எஸ். நகர், சேதுபதி நகர், எம்.ஜி.ஆர். நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இத்தகவலை திருப்புவனம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story