நாமக்கல் ரெங்கநாதர் கோவில் தேர் புதுப்பிக்கும் பணி 75 சதவீதம் நிறைவு
நாமக்கல் ரெங்கநாதர் கோவில் தேர் புதுப்பிக்கும் பணி 75 சதவீதம் நிறைவு
நாமக்கல்:
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ரெங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தேர் சுமார் 25 ஆண்டுகளாக மராமத்து பணி செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தேரை சுமார் ரூ.56 லட்சம் செலவில் மராமத்து செய்து, புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி தேர் புதுப்பிக்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகாபலிபுரத்தை சேர்ந்த தண்டபாணி ஸ்தபதி தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் தேரை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேரில் உள்ள சிற்பங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 75 சதவீத பணிகள் நிறைவடைந்து இருப்பதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் தேர் புதுப்பிக்கும் பணி நிறைவடையும் எனவும் அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story