கோவில் பூசாரி கைது
கோவில் பூசாரி கைது
இணைய தளத்தில் முகநூல் பக்கத்தில் குழந்தைகளின் ஆபாச படங்கள் வருவதாகவும், அதுவும் ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் இது குறித்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2ந் தேதி புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது அந்த குறிப்பிட்ட எண் யாருடையது என்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த செல்போன் எண் மடத்துக்குளத்தை அடுத்த கணியூர் அக்ரஹார வீதியைச் சேர்ந்த வைத்தியநாதன் என்கின்ற பாலாஜிவயது 50 என்பவருக்கு சொந்தமானது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை ேபாலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் வைத்தியநாதன் வெங்கிட்டாபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக இருந்து வருவதும், போலியாக முகநூல் பக்கம் தொடங்கியதுடன், அதில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பதிவேற்றம் செய்ததாகவும் தெரியவந்தது.
கைது
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வைத்தியநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குழந்தைகளின் ஆபாச படங்களை கோவில் பூசாரியே முகநூலில் பதிவேற்றம் செய்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story