தியாகதுருகம் அருகே கற்பித்தல் நிகழ்ச்சி


தியாகதுருகம் அருகே கற்பித்தல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 6 March 2022 11:01 PM IST (Updated: 6 March 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே கற்பித்தல் நிகழ்ச்சி


கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே சின்னமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்ற திட்டம் குறித்த கற்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை தாங்கி பள்ளி பரிமாற்ற திட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கமாக கூறினார். வட்டார கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அம்பிகாபதி வரவேற்றார். 

இதில் தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 15 மாணவிகள் சின்னமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வந்து இங்குள்ள கிராமப்புற பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பல்வேறு சூழ்நிலைகள், கற்றல் அனுபவங்கள் மற்றும் கருத்துக்களையும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளி மாணவர்கள் பகிர்ந்து கொள்ளும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் ஹரிஹரன், சரிதா மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story