மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது
மங்கலம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15வயது மாணவி கடந்த 4ந் தேதி திடீரென்று காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து உறவினர்களின் வீடுகளுக்கு சென்று விட்டாரா என்று அங்கேயும் சென்று தேடினர். ஆனாலும் அங்கேயும் போகவில்லை என தெரியவந்தது.
இதையடுத்து மங்கலம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவி கொடைக்கானலில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கொடைக்கானல் சென்றனர். அப்போது அங்கு மாணவியுடன் 2 வாலிபர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை விசாரித்த போது அவர்கள் மங்கலத்தை அடுத்த இச்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த டிரைவர் பொன்னுச்சாமி என்றும் மற்றொருவர் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த சிக்கந்தர்பாஷா என்றும் தெரியவந்தது.
2 பேர் கைது
காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை காரில் கடத்தி வந்து பொன்னுச்சாமி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், மாணவியை கடத்தி செல்ல சிக்கந்தர் பாஷா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 2 பேரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சிக்கந்தர் பாஷா-வின் சொந்த ஊர் கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை ஆகும். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story