கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது
சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே பாலவெளி கிராமத்தில் தரங்கம்பாடி சாலையில் வழித்துணை அய்யனார் கோவில் அருகில் உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அமர்ந்து மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங்கிற்கு பலமுறை புகார் வந்தது. இதனையடுத்து அந்த பகுதியில் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அதன் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி கலந்துகொண்டு சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா பதிவை தொடங்கி வைத்தார். இதில் போலீசார், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story