சாமி சிலை உடைப்பு
சாமி சிலை உடைப்பு
பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் காலனி பகுதியில், மதுரைவீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவில் முன்பாக கல்லால் ஆன மகாமுனி சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை கோவில் அருகே சில வாலிபர்கள் மதுபானம் அருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் சிலர் கோவில் முன்பு இருந்த மகாமுனி சிலையை உடைத்து, தகர்த்து எடுத்து வீசியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் அந்த சிலையை தேடியபோது சிலை கிடைக்கவில்லை. இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவம் நடந்த கோவிலுக்கு வந்து விசாரணை செய்தனர். குடிபோதையில், சாமி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் காமநாயக்கன்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story