மருத்துவ படிப்புக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்
மருத்துவ படிப்புக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே மூவன்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராசு-சரஸ்வதி தம்பதியின் மூன்று மகள்களில் மூத்தமகள் கார்த்திகை செல்வி. இவர் உக்ரைன் நாட்டில் உஸ்ரோட் மாநிலத்தில் உள்ள நேஷனல் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு இரண்டாவது ஆண்டு படித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், உக்ரைன் நாட்டில் இரண்டாவது ஆண்டாக மருத்துவப்படிப்பு படித்து வருகிறேன். என்னை போல தென் மாவட்டங்களில் உள்ள பல மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக நாங்கள் செய்வதறியாது தவித்து வந்தோம். மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் என்னை போன்ற தென் மாவட்டங்களை சேர்ந்த 20 மாணவர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டு நாடு திரும்பினோம். என்னை போன்ற இரண்டு ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு பயின்ற மாணவர்களுக்கு மேலும் நான்கு ஆண்டுகள் மருத்துவ படிப்பு உள்ள நிலையில் அதற்கு மத்திய, மாநில அரசுகள் படிப்பிற்கு உதவிட வேண்டும் என்றார்.
முன்னதாக சிங்கம்புணரி பகுதி பா.ஜனதா கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் மாணவியை சந்தித்து வாழ்த்து கூறினர். மேலும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூமிநாதன் தலைமையில், சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற தலைவர் அம்பல முத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில் மற்றும் அவை தலைவர் சிவக்குமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மாணவிக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். அதேபோல் சிங்கம்புணரி அ.தி.மு.க.வை சேர்ந்த நகர செயலாளர் வாசு தலைமையில், ஒன்றிய செயலாளர் திருவாசகம் முன்னிலையில் மாணவிக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
Related Tags :
Next Story