கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 6 March 2022 11:16 PM IST (Updated: 6 March 2022 11:16 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

மெலட்டூர், மார்ச்.7-
கும்பகோணம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 
வடக்குமாங்குடி ஊராட்சி 
அம்மாப்பேட்டை ஒன்றியம் வடக்குமாங்குடி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி  முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜன் தொடங்கி வைத்தார். முகாமில் மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் வடக்குமாங்குடி ஊராட்சியை சேர்ந்த கிராம மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் வடக்குமாங்குடி ஊராட்சி செயலர் கார்த்திக் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டனர். 
இரும்புதலை ஊராட்சி 
அம்மாப்பேட்டை ஒன்றியம் இரும்புதலை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி தொடங்கி வைத்தார். முகாமில் சாலியமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கஸ்தூரி, அங்கன்வாடி பணியாளர் குமுதவள்ளி மற்றும் மருத்துவ குழுவினர் இரும்புதலை ஊராட்சியை சேர்ந்த 37 பேருக்கு தடுப்பூசி செலுத்தினர். முகாமில் பணித்தள பொறுப்பாளர் உஷாராணி, சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு செய்திருந்தார்.
களஞ்சேரி ஊராட்சி 
அம்மாப்பேட்டை ஒன்றியம் களஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார். முகாமில் சாலியமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தட்சிணாமூர்த்தி, கிராம சுகதார செவிலியர் பூமா மற்றும் மருத்துவ அலுவலர்கள் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தினர். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர் ஜீவிதா, உதவியாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
----


Next Story