உக்ரைன் நாட்டில் இருந்து வாணியம்பாடி திரும்பிய மருத்துவ மாணவர்
உக்ரைனில் இருந்து தாய் நாடு திரும்பிய வாணியம்பாடி மருத்துவ மாணவரை ஆரத்தி எடுத்தும், இனிப்பு ஊட்டியும் ெபற்றோர் வரவேற்றனர்.
வாணியம்பாடி
உக்ரைனில் இருந்து தாய் நாடு திரும்பிய வாணியம்பாடி மருத்துவ மாணவரை ஆரத்தி எடுத்தும், இனிப்பு ஊட்டியும் ெபற்றோர் வரவேற்றனர்.
5-ம் ஆண்டு படிப்பு
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவரின் மகன் அஸ்வின். இவர் உக்ரைன் நாட்டில் வின்னிட்சியா என்ற இடத்தில் உள்ள தேசிய மருத்துவ கல்லூரியில் 5-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.
இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் இந்திய மாணவர்கள் அங்கிருந்து திரும்ப முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் உக்ரைனில் தவித்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.
அதன்படி மாணவர் அஸ்வின் வாணியம்பாடிக்கு திரும்பினார். அவருக்கு பெற்றோர் ஆரத்தி எடுத்து வரவேற்று இனிப்பு ஊட்டினர்.
அனைத்து வசதிகளையும்...
வாணியம்பாடி திரும்பிய மாணவர் அஸ்வினை சந்தித்தபோது அவர் கூறியதாவது:-
நான் இருந்த இடத்தில் 2 ஆயிரம் மாணவர்களை அங்கு உள்ள பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து பின்னர் ருமேனியா எல்லைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அங்கிருந்து இந்திய தூதரகம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டு பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
போர் நடைபெற்று அங்கு தவித்து வந்த நாட்களில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அறிவுறுத்தலின் பேரில் அங்கு எங்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர்.
நாடு திரும்ப உதவி
மேலும் இந்திய தூதரகம் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து எங்களை தொடர்பு கொண்டு தைரியத்தை வரவழைத்து அச்சமின்றி நாடு திரும்ப உதவி செய்தனர்.
இதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கும், மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து எங்களை தாய் நாடு திரும்ப உதவி செய்த தமிழக அரசுக்கும் முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் உக்ரைனில் தவித்து வரும் இந்திய மாணவர்களை மீட்க தாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-அமைச்சருக்கு நன்றி
மேலும் மாணவரின் தந்தை அருண்குமார் கூறியதாவது,
என்னிடமும் உக்ரைன் நாட்டில் இருந்த என் மகனிடமும் தொடர்ந்து தினமும் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறி மிகவும் பாதுகாப்பாக எங்களிடம் கொண்டு வந்து சேர்த்த மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
என் மகனை போன்று அங்குள்ள மற்ற இந்திய மாணவர்களையும் மீட்டு அழைத்து வர மத்திய மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story