போலீசார் தங்கள் பணியை முழு ஈடுபாடுடன் செய்ய வேண்டும்; டி.ஐ.ஜி. பேச்சு


போலீசார் தங்கள் பணியை முழு ஈடுபாடுடன் செய்ய வேண்டும்; டி.ஐ.ஜி. பேச்சு
x
தினத்தந்தி 6 March 2022 11:58 PM IST (Updated: 6 March 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் தங்கள் பணியை முழுஈடுபாடுடன் செய்ய வேண்டும் என்று வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கூறினார்.

வேலூர்

போலீசார் தங்கள் பணியை முழுஈடுபாடுடன் செய்ய வேண்டும் என்று வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கூறினார்.

காக்கி பூக்களின் திருவிழா

வேலூர் சரக காவல்துறை சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி 'காக்கி பூக்களின் திருவிழா' நிகழ்ச்சி வேலூர் சத்துவாச்சாரியில் நேற்று நடந்தது. 

போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ்கண்ணன் (வேலூர்), தீபாசத்யன் (ராணிப்பேட்டை), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி வரவேற்றார்.

வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தலைமை தாங்கி பேசியதாவது:-
பெண்கள் எந்த துறையில் இருந்தாலும் வெற்றி கிடைக்கும். அங்கு நல்ல விஷயங்கள் தான் நடக்கும். போலீஸ் துறையிலும் பெண்களுக்கு வெற்றி கிடைக்கும்.

 வாழ்க்கையில் ஒழுக்கம் மிக மிக முக்கியம். ஒழுக்கத்துடன் பணிபுரிந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். போலீசார் ஒழுக்கத்துடன் பணியாற்ற வேண்டும்.

முழு ஈடுபாடுடன்

வாழ்வில் எப்போதும் கலர்புல்லாக இருக்க வேண்டும். காவல்துறையினர் தங்கள் பணியை சிறப்பாகவும், முழுஈடுபாடுடனும் செய்ய வேண்டும். 

இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எந்த பிரச்சினை வந்தாலும் சந்தோஷமாக அதனை எதிர்கொள்ள வேண்டும். அப்போது அந்த பிரச்சினை வந்த வழியே காணாமல் போய்விடும்.
இவ்வாறு அவர் பேசினார்..

நடனமாடிய டி.ஐ.ஜி.

தொடர்ந்து டி.ஐ.ஜி. மகளிர்தினம் குறித்து அவர் எழுதிய வாழ்த்து மடலை பெண் போலீசாருக்கு வழங்கினார்.
 நிகழ்ச்சியில் பெண் போலீசார் தனித்தனியாக கவிதைகள் வாசித்தும், பாட்டு பாடியும், நடனமாடியும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். 

பின்னர் பெண் போலீசார் பலர் ஒன்றாக சேர்ந்து பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடினர். அவர்களுடன் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் ஆகியோர் இணைந்து நடனமாடி உற்சாகப்படுத்தினர்.

இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story