அனுமதியின்றி நடந்த கன்று விடும் விழா


அனுமதியின்றி நடந்த கன்று விடும் விழா
x
தினத்தந்தி 6 March 2022 11:58 PM IST (Updated: 6 March 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

வல்லண்டராமம் பகுதியில் அனுமதியின்றி கன்று விடும் விழா நடந்தது.

அணைக்கட்டு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வல்லண்டராமம் பகுதியில் அரசு அனுமதியின்றி நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை கன்று விடும் திருவிழா நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 120 கன்று குட்டிகள் போட்டியில் கலந்துகொண்டன. 

காளை விடும் விழா கலெக்டர் அனுமதி பெற்று விழா நடந்து வருகின்றன. ஆனால் நேற்று நடந்த கன்று விடும் விழா அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் நடைபெற்றது‌. 

தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் விரைந்து சென்று அனுமதி இல்லாமல் கன்று விடும் விழா நடத்தக்கூடாது என்றனர். மேலும் அணைக்கட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி அங்கு வந்து விழா குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையடுத்து கன்று விடும் விழா நடந்தது. கன்று விடும் திருவிழா என அறிவித்து இருந்தும், இதில் பெரிய காளைகளும்  கலந்து கொண்டன. விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு கன்று விடும்விழாவை ரசித்தனர்.
போட்டியில் கலந்து கொள்ள வந்த கன்று தெருவில் அதிவேகமாக ஓடி அருகே இருந்த நீரோடையில் தலைகுப்புற விழுந்தது. அங்கிருந்தவர்கள் உடனடியாக நீரோடையில் குதித்து கன்றுக்குட்டியை காப்பாற்றினர்.

Next Story