ரூ.58 ஆயிரம் மோசடி


ரூ.58 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 7 March 2022 12:12 AM IST (Updated: 7 March 2022 12:12 AM IST)
t-max-icont-min-icon

ரூ.58 ஆயிரம் மோசடி

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது (வயது 28). இவர் தனியார் நிறுவன கிரெடிட் கார்டு வைத்துள்ளார். அந்த கார்டின் பில் தேதி தவணை தெரியாத நிலையில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் விசாரிப்பதற்காக கூகுளில் தேடியுள்ளார். அதில் உள்ள தனியர் நிறுவனத்தின் எண் என குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டபோது மறுமுனையில் பேசியவர் இந்தி மொழியில் பேசி உள்ளார். இதனால் மொழி தெரியாத முகம்மது அருகில் உள்ள தனது நண்பரிடம் கொடுத்து இந்தியில் பேசி விவரம் கேட்குமாறு கூறியுள்ளார். அந்த நபரும் இந்தியில் பேசியுள்ளார். அப்போது கிரெடிட் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை பெற்று அவரின் கணக்கில் இருந்து ரூ.57 ஆயிரத்து 888-ஐ 2 தவணைகளில் எடுத்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முகம்மது இதுகுறித்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story