விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
சிவகாசி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி,
வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ள புலிப்பாறைப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (வயது 37). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தது. இந்தநிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அந்த பெண் சங்கரை பிரிந்து தனது குழந்தைகளுடன் கிருஷ்ணன்கோவில் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வைரம் என்ற பெண்ணை, சங்கர் 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் புலிப்பாறைப் பட்டியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் நோய் பாதிப்பு காரணமாக வைரம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். 2-வது மனைவி இறந்த வருத்தத்தில் இருந்த சங்கர் சம்பவத்தன்று இரவு மதுவுடன் பூச்சி மருந்தை கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்த தனது தாய் லட்சுமி என்பவரை எழுப்பி தான் பூச்சி மருந்து குடித்துவிட்டதாக கூறி உள்ளார். உடனே உறவினர்கள் உதவியுடன் சங்கரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பணியில் இருந்த டாக்டர், சங்கரை சோதித்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதைதொடர்ந்து லட்சுமி அளித்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story