பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
ராதாபுரம் அருகே பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
ராதாபுரம்:
ராதாபுரம் அருகே உள்ள சங்கநேரியை சேர்ந்த தேவராஜ் மகன் தனபால் (வயது 28). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வள்ளியூரில் இருந்து கூடங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் அவரது சகோதரர் அகஸ்டின் (27) என்பவரும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தார்.
மகேந்திரபுரம் அருகே சென்றபோது ஊருக்கு அருகே உள்ள பாலத்தில் அவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தனபால் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயம் அடைந்த அகஸ்டின், ராதாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story