அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது
தாயில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோதிராஜ், வெற்றி முருகன் ஆகியோர் தலைமையில் போலீசார் கீழதாயில்பட்டி, கோட்டையூர், பசும்பொன் நகர், தாயில்பட்டி, விஜயகரிசல்குளம் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுகிறதா என அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கீழதாயில்பட்டியை சேர்ந்த மாதவன் (வயது 34), பசும்பொன் நகரை சேர்ந்த முனீஸ்வரன் (42), வெற்றிலையூரணியை சேர்ந்த ராஜ்குமார் (34), விஜயகரிசல்குளத்தை சேர்ந்த நல்லதம்பி (25) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த சரவெடிகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story