போதிய பஸ்கள் இல்லாததால் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்


போதிய பஸ்கள் இல்லாததால் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்
x
தினத்தந்தி 7 March 2022 1:50 AM IST (Updated: 7 March 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் இருந்து ஆலங்குளத்திற்கு போதிய பஸ்கள் இல்லாததால் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

ஆலங்குளம், 
சிவகாசியில் இருந்து ஆலங்குளத்திற்கு போதிய பஸ்கள் இல்லாததால் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். 
அரசு பள்ளி 
ஆலங்குளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்த பள்ளியில் ஆலங்குளம் அருகே உள்ள கங்கர் செவல், கே.லட்சுமிபுரம், வெம்பகோட்டை, கண்டியாபுரம், முத்துச்சாமிபுரம், குண்டாயிருப்பு,பாரைப் பட்டி, ராமுத்தேவன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 
இந்தநிலையில் காலை நேரத்தில் சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை வழியாக ஆலங்குளத்திற்கு குறைந்த பஸ்கள் தான் இயக்கப்படுகிறது. 
ஆபத்தான பயணம் 
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:- 
ஆலங்குளத்தில் உள்ள அரசு பள்ளியில் எண்ணற்ற கிராமங்களில் இருந்து மாணவ-மாணவிகள் கல்வி பயின்ற வருகிேறாம். இந்தநிலையில் சிவகாசியில் இருந்து ஆலங்குளத்திற்கு குறைவான அளவில் தான் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்யக்கூடிய நிலை உள்ளது. 
தற்போது சிவகாசியிலிருந்து வெம்பக்கோட்டை வழியாக ஒரு அரசு பஸ் மட்டும் வந்து செல்கிறது. ஆதலால் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள்இயக்க வேண்டும். ராஜபாளையத்திலிருந்து வெம்பக்கோட்டை வரை அரசு பஸ் சென்று வருகின்றது. இந்த பஸ் ராமுத்தேவன்பட்டி வரை சென்று வந்தால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணம் செய்வதை தவிர்க்க முடியும். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் ெகாண்டு சிவகாசியில் இருந்து ஆலங்குளத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story