மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்
கொட்டாம்பட்டி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
மணல் கடத்தல்
கொட்டாம்பட்டி பகுதிகளில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில் சொக்கலிங்கபுரம் கிராம நிர்வாக அதிகாரி ரகு தலைமையில் அலுவலர்கள் பொட்டக்களம் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது மணல் ஏற்றி வந்த டிராக்டரை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.
உடனே டிராக்டரில் இருந்த டிரைவரும், மற்றொருவரும் தப்பி ஓடி விட்டனர். விசாரணையில் மணல்மேட்டுப்பட்டியை சேர்ந்த சக்திவேல், சிங்கம்புணரியை சேர்ந்த மதி என்பது தெரியவந்தது. அரசு அனுமதியின்றியும் முறையான ஆவணங்கள் இல்லாமலும் மணல் எடுத்து வந்தது தெரியவந்தது.
2 பேர் மீது வழக்கு
இதையடுத்து பறிமுதல் செய்த டிராக்டரை கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி ரகு கொடுத்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் சக்திவேல், மதி ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story