வாலிபர் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்


வாலிபர் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 7 March 2022 2:03 AM IST (Updated: 7 March 2022 2:03 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரம் அருகே இறந்த வாலிபர் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே செட்டிமேடு இந்திரா காலனியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி மகன் மாரிசேகர் (வயது 22). இவர் கடந்த 4-ந்தேதி இரவில் வேம்பையாபுரம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அங்குள்ள பழைய கட்டிடத்தின் அருகில் படுகாயத்துடன் கிடந்தார். உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.இந்த நிலையில் மாரிசேகர் விபத்தில் இறந்ததாக விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாரிசேகரின் உறவினர்கள், தேர்தல் முன்விரோதத்தில் மாரிசேகரை சிலர் கொலை செய்தததாக குற்றம் சாட்டினர். மேலும் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக மாரிசேகரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 

Next Story