பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 March 2022 2:05 AM IST (Updated: 7 March 2022 2:05 AM IST)
t-max-icont-min-icon

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமைப்பின் தொடக்க தினத்தை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் நடத்த இருந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்ததை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் சையது அபுதாகீர் தலைமை தாங்கினார். பின்னர் அந்த கட்சியினர் காமராஜர் வளைவு அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பெரம்பலூர் போலீசார், மறியலில் ஈடுபட்ட 24 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story