மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று


மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 7 March 2022 2:05 AM IST (Updated: 7 March 2022 2:05 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 459 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இவர்களில் 14 ஆயிரத்து 205 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். கொரோனா தொற்றுக்கு இதுவரை 249 பேர் பலியாகி உள்ளனர். தற்போது கொரோனா வெகுவாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.  மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று முழுமையாக குறைந்து புதிதாக தொற்று இல்லாத நிலையை அடைந்தது. தற்போது மொத்தம் 5 பேர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ளனர். இவர்களில் 4 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story