கார்- சரக்கு வேன் மோதல்; 4 பேர் படுகாயம்
கார்- சரக்கு வேன் மோதிக்கொண்டதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கீழப்பழுவூர்:
பெரம்பலூர் மாவட்டம் கைகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராபர்ட் செல்லதுரை(வயது 48). இவர் தனது குடும்பத்துடன் அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு வந்துவிட்டு, பின்னர் காரில் மீண்டும் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். சாலையின் இருபுறமும் விவசாய கழிவுகளை தொழிலாளர்கள் கொளுத்தியதால் ஒரே புகை மூட்டமாக இருந்துள்ளது. சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் கூட தெரியாத நிலையில் புகைமூட்டம் இருந்ததால் திருமழபாடி நோக்கி வந்த சரக்கு வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் காரில் பயணம் செய்த டிரைவர் உள்ளிட்ட 3 பேரும், சரக்கு வேனின் டிைரவரும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட திருமானூர் போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story