போலீஸ் துறையில் தொழில்நுட்பத்தை புகுத்துவது அவசியம் - ஜெகதீஷ் ஷெட்டர் சொல்கிறார்
போலீஸ் துறையில் தொழில்நுட்பத்தை புகத்துவது அவசியம் என்று முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
உப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குற்றங்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து வருகிறாா்கள். ஆனால் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை. அவர்களுக்கு எதிரான சாட்சி, ஆதாரங்கள் கிடைக்காமல் இருப்பதால், விசாரணையும் தாமதமாகி வருகிறது. இதற்கு முன்பு தடயவியல் ஆய்வு மையம் குறைவாக இருந்தது. தடயவியல் ஆய்வு அறிக்கை கிடைக்க மாதக்கணக்கில் ஆனது. இதுவும் விசாரணை நடைபெறுவதில் தாமதமானது.
போலீஸ் துறையில் விசாரணை, விதிமுறைகளில் மாற்ற வேண்டும். விரைவாக விசாரணையை முடித்து, சம்பந்தப்பட்ட நபருக்கு தண்டனை கிடைக்க வேண்டும். இதற்காக போலீஸ் துறையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில் போலீஸ் துறையில் தொழில் நுட்பத்தை புகுத்துவது அவசியமானதாகும். இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பட்ஜெட்டில் தார்வாருக்கு பல்வேறு திட்டங்களை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story