கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை


கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 March 2022 3:00 AM IST (Updated: 7 March 2022 3:00 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே கொத்தனார் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பத்மநாபபுரம்:
தக்கலை அருகே முல்லைநகர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 55), கொத்தனார். இவருடைய மனைவி அனிதா. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இதில் மகனுக்கு திருமணமாகி விட்டது. நேற்று மகன் அஜித் தனது மனைவியுடன் மண்டைக்காடு கோவிலுக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது அய்யப்பன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அய்யப்பன் தற்கொலைக்கு காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story