கோபி, அந்தியூர் கூட்டுறவு சங்கங்களில் ரூ.11 லட்சத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை


கோபி, அந்தியூர் கூட்டுறவு சங்கங்களில் ரூ.11 லட்சத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை
x
தினத்தந்தி 7 March 2022 3:16 AM IST (Updated: 7 March 2022 3:16 AM IST)
t-max-icont-min-icon

கோபி, அந்தியூர் கூட்டுறவு சங்கங்களில் ரூ.11 லட்சத்து 1,000-க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு
கோபி, அந்தியூர் கூட்டுறவு சங்கங்களில் ரூ.11 லட்சத்து 1,000-க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது. 
அந்தியூர்
அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு எண்ணமங்கலம், கோவிலூர், சென்னம்பட்டி, வெள்ளித்திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்து 60 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன.
இதில் கதலி (கிலோ) ரூ.32-க்கும் நேந்திரம் ரூ.35-க்கும் ஏலம் போனது. பூவன் (தார்) ரூ.570-க்கும், செவ்வாழை ரூ.630-க்கும், ரஸ்தாளி ரூ.450-க்கும், தேன்வாழை ரூ.560-க்கும், மொந்தன் ரூ.250-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 11 ஆயிரத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டன. ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து வந்த வியாபாரிகள் வாழைத்தார்களை ஏலம் எடுத்து சென்றனர்.
கோபி
இதேபோல் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு 3 ஆயிரத்து 300 வாழைத்தார்கள் கொண்டு் வரப்பட்டன. இதில் கதலி (கிலோ) ரூ.25-க்கும், நேந்திரன் ரூ.30-க்கும் ஏலம் போனது. பூவன் (தார்) ரூ.400-க்கும், தேன்வாழை ரூ.510-க்கும், செவ்வாழை ரூ.640-க்கும், பச்சைநாடன் ரூ.290-க்கும், மொந்தன் ரூ.300-க்கும், ரொபஸ்டா ரூ.310-க்கும், ரஸ்தாளி ரூ.400-க்கும் விற்பனை ஆனது. மொத்தம் ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு 5 ஆயிரத்து 470 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. இதில் தேங்காய் ஒன்று 9 ரூபாய் முதல் 17 ரூபாய் 40 காசு வரை என மொத்தம் 6 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கோபி, அந்தியூர் கூட்டுறவு சங்கங்களில் நடந்த ஏலத்தில் ரூ.11 லட்சத்து 1,000-க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது.
மொடக்குறிச்சி
எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 991 கிலோ எடையுள்ள 8 ஆயிரத்து 524 தேங்காய்களை கொண்டுவந்தனர்.
இது (கிலோ) குறைந்தபட்ச விலையாக 25 ரூபாய் 15 காசுக்கும், அதிகபட்ச விலையாக 32 ரூபாய் 53 காசுக்கும் என மொத்தம் 92 ஆயிரத்து 983 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Next Story