திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தார்கள்.
தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தார்கள்.
திம்பம் மலைப்பாதை
தாளவாடி அருகே உள்ள திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த மலைப்பாதை தமிழக-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய பாதையாக உள்ளது. இந்த மலைப்பாதையில் வனவிலங்குகள் வாகனத்தில் மோதி உயிரிழப்பதை தடுப்பதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால் தினமும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பண்ணாரி சோதனை சாவடியிலும், காரப்பள்ளம் சோதனை சாவடியிலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகிறது. காலை 6 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.
கடும் போக்குவரத்து நெரிசல்
அதேபோல் நேற்று காலை 6 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து வாகனங்கள் ஒன்றோடொன்று முந்தி செல்ல முயன்றதால் திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதனால் காலை 8 மணி அளவில் திம்பம் மலைப்பாதையில் இருபுறமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கனரக வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதால் மற்ற வாகனங்கள் அதன் பின்னாலே செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆம்புலன்சும் உரிய நேரத்துக்கு நோயாளிகளையும் கர்ப்பிணிகளையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. 30 நிமிடத்தில் கடக்க வேண்டிய திம்பம் மலைப்பாதையை வாகனங்கள் கடக்க 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை ஆகிறது. போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்போது அதை சரிசெய்ய போதிய எண்ணிக்கையில் போலீசாரும் இல்லை. எனவே வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். உடனே மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story